Categories
சினிமா

விருது கொடுக்க என்ன தகுதி இருக்கு?… பிரியங்கா சோப்ரா தக்க பதிலடி…!!!

ஆஸ்கர் விருது கொடுக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு என்ற பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு பிரியங்கா சோப்ரா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

 

அமெரிக்காவில் 93 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா வரும் 25 ஆம் தேதி   நடக்க உள்ளது  .அந்த விழாவை நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும்  நிக் ஜோனாசும் தொகுத்து வழங்க உள்ளனர். அந்த விருதுக்கான பரிந்துரை  பட்டியல்கள் கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த விழா வழக்கம்போல் நடத்தப்பட்டாலும் குறைந்த அளவிலேயே பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்  என்று அமெரிக்கா அறிவித்துள்ளது .மேலும் இந்த விழாவில் பங்கேற்க முடியாதவர்கள் நேரலையாக சமூக ஊடகங்கள் வாயிலாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2016ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் விருதை கொடுப்பதற்காக கலந்துகொண்ட பிரியங்கா சோப்ரா இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை செய்யப்பட்ட படங்களின் பட்டியலை வெளியிட உள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள பீட்டர் போர்ட் என்ற  பத்திரிகையாளார் ஒருவர், ஆஸ்கர் விருதுக்கான பட்டியலை அறிவிக்க நடிகை பிரியங்காவுக்கு என்ன தகுதி உள்ளது ?என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பிஉள்ளார் .

அதற்கு பதிலளித்த ப்ரியங்கா சோப்ரா’ ஒருவருக்கு என்ன தகுதி’ உள்ளது என்பது குறித்து உங்கள் கேள்விக்கான பதிலை நான் அளிக்க விரும்புகிறேன் என்று தனது நடிப்பில் வெளியான 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களை உங்கள் பார்வைக்கு சான்றாக வைத்துள்ளேன் என்றும்,  தான் நடித்த அந்தப் படங்களின் தொகுப்பை அவருக்கு பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்

Categories

Tech |