இங்கிலாந்து நாட்டின் தலைநகரிலுள்ள பிரபல நிறுவனங்கள் ஒன்றாக சேர்ந்து நடத்தும் சிறந்த ஆசிரியர்களுக்கான போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு பாரிசில் வைத்து நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் தலைநகரிலுள்ள யுனெஸ்கோ மற்றும் வர்க்கி பவுண்டேஷன் என்னும் பிரபல நிறுவனங்கள் ஒன்றாக சேர்ந்து சர்வதேச அளவிலான சிறந்த ஆசிரியர்களுக்கான போட்டியை வருடந்தோறும் நடத்தி வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டிற்கான சிறந்த ஆசிரியர் விருதை பெறும் நோக்கில் சுமார் 8,000 ஆசிரியர்கள் இதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள்.
இதனையடுத்து இந்த 8,000 ஆசிரியர்களில் மேற்குறிப்பிட்டுள்ள நிறுவனங்கள் சுமார் 50 சிறந்த ஆசிரியர்கள் பட்டியலை வெளியிட்டதில் 2 பேர் இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட 50 சிறந்த ஆசிரியர்களிலிருந்து வெற்றி வாகை சூடும் டாப் 10 ஆசிரியர்களுக்கு பாரிசில் வைத்து நடைபெறும் கோலாகல நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.