அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீவத்சவா என்பவர் சிப்ரியான் போயாஸ் விருது வழங்கப்படுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஸ்ரீவத்சவா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.
அதோடு மட்டுமின்றி ஸ்ரீவத்சவா உலகளவில் தீர்க்கமுடியாத பலவகையான கணித புதிர்களுக்கு தன்னுடைய அறிவால் விடையை கண்டறிந்துள்ளார்.
இந்நிலையில் இவர் சிப்ரியன் போயாஸ் என்ற மிகவும் உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதினை ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க நாட்டின் கணிதவியல் அமைப்பு கொடுத்து வருகிறது.