நல்ல ஆசிரியர்களுக்கான விருதுகளை வழங்கி விழாவில் ஆசிரியர் மகன் என்பதில் பெருமை கொள்கிறேன் என கலெக்டர் அமர் குஷ்வாஹா பேசியுள்ளார்.
திருப்பத்தூரில் ஆசிரியர் தின விழா அன்று நல்லாசிரியர் விருதுகளை எட்டு ஆசிரியர்களுக்கு வழங்கபட்டது. அப்போது இம்மாவட்டத்தில் பணிபுரிகின்ற பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர்கள் எல்லோரும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு கதைகளை கூறியும் பாடங்களை நடத்த வேண்டும். இதனை அடுத்து மாணவர்களுக்கு எந்தப் பாடத்தில் விருப்பம் அதிகமாக இருக்கின்றது என கண்டறிந்து அதற்கு ஏற்ப பாடங்களை நடத்த வேண்டும் எனவும் கலெக்டர் கூறியுள்ளார்.
அதன்பின் தன்னுடைய அப்பா, அம்மா இரண்டு பேரும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நானும் ஒரு ஆசிரியர் மகன் என்று கூறுவதில் பெருமை கொள்கிறேன் என கலெக்டர் தெரிவித்துள்ளார். பின்னர் மாணவர்களை விஷ்ணுகுப்தன் ஆகிய கதைகளை படிக்கும் பழக்கத்தை தூண்ட வேண்டும் எனவும், நான் தினமும் 200 பக்கங்கள் புத்தகங்கள் படிப்பது போன்று எனது குழந்தைகள் மற்றும் மனைவியும் படித்து வருகிறார்கள். இதனையடுத்து இந்திய ஆட்சிப் பணி பயிற்சியில் என்னுடன் பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே அரசு பள்ளியில் படித்தவர்கள் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.