கடைசி மற்றும் 3 வது ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றியை கைப்பற்றியது.
புனேவில் இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையே கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பகல் -இரவு ஆட்டமாக நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. பேட்டிங் செய்த இந்திய அணி 48.2 அவர்களே 329 ரன்களை எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 330 ரன்களை இலக்காக கொண்டு ஆட்டத்தில் களமிறங்கியது. ஆனால் துவக்க ஆட்டத்திலேயே இங்கிலாந்து அணி சறுக்கலை கண்டது. துவக்க ஆட்டக்காரர்களான ஜேசன் ராய் 14 ரன்களிலும் ஜானி பேர்ஸ்டோ ஒரு ரன்களிலும் வெளியேறினார்கள்.
இந்திய அணியின் புவனேஸ்வர் குமார் இந்த 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்பின் பென் ஸ்டோக்ஸ்- டேவிட் மலான் ஜோடி நிதானமாக ஆட்டத்தை விளையாடியது. ஆனால் பென் ஸ்டோக்ஸ் 35 ரன்கள் எடுத்த நிலையில், நடராஜனின் பந்துவீச்சால் ஆட்டமிழந்தார். இதன்பின் களமிறங்கிய ஜோஸ் பட்லர் 15 ரன்கள் ,லிவிங்ஸ்டன் 36 ரன்கள் மற்றும் அரைசதம் அடித்த டேவிட் மலான் ஆகிய மூவரையும் ஷர்துல் தாகூர் அவுட் ஆக்கினார். எனவே இங்கிலாந்து அணி 168 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் களமிறங்கிய சாம் கர்ரன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இங்கிலாந்து அணிக்காக போராடினார்.
இவருடன் இணைந்து விளையாடிய மொயீன் அலி 29 ரன்கள், அடில் ரஷித் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி கடைசி ஓவரில் 14 ரன்கள் கிடைத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. இந்தக் கடைசி ஓவரில் இந்திய அணி நடராஜன் பந்துவீசினார். எனவே கடைசி ஓவரில் இங்கிலாந்து அணி 6 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்களை எடுத்து தோல்வியை சந்தித்தது. எனவே இறுதிப்போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றியை கைப்பற்றியது.