பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெறுகிறது. இதில் நேற்றைய எபிசோடில் இரண்டு சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள முதல் புரோமோ வில் மூன்றாம் சுற்று நடைபெறுகிறது. இதில் டாஸ்க் பஸர் அடித்தவுடன் யார் முதலில் சென்று அங்கு வைக்கப்பட்டிருக்கும் மேடையை தொடுக்கிறார்களோ அவர்கள் அந்தப் பாடலுக்கான பல்லவியை பாட வேண்டும். இதில் முதலாவதாக சிவானி பாட்டு பாடி முடிக்கிறார் . இதையடுத்து வந்த பாலா, கேபி ,சிவானி மூவரும் ஒரே நேரத்தில் அந்த மேடையை தொடுகிறார்கள் .
#Day93 #Promo1 of #BiggBossTamil#பிக்பாஸ் – திங்கள் – வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/N292tVKlFQ
— Vijay Television (@vijaytelevision) January 5, 2021
பின் ‘நான் தான் முதலில் தொட்டேன்’ என மூவரும் சண்டை போடுகின்றனர் . அப்போது கேப்டன் ரியோ ‘யார் முதலில் தொட்டவர்கள் என்பதை முதலில் முடிவு செய்யுங்கள்’ என்கிறார். இதையடுத்து ‘நான் தான் முதலில் தொட்டேன்’ எனக்கூறி கேபி பாடலைப் படித்து விடுகிறார். இதனால் வெறுப்படைந்த பாலாஜி கேபி மீது கோபமடைகிறார் . இப்படி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த டாஸ்க் இறுதியில் யார் ?வெற்றி பெறுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .