மலேசியாவிற்கு சுற்றுலா வர விரும்பும் இந்தியர்கள் விசா இல்லாமல் வரலாம் என்ற புதிய அறிவிப்பை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவை தவிர்த்து பிற உலக நாடுகளில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் கண்டிப்பாக விசா என்பது தேவைப்படும். அதை பெறுவதற்கு பல்வேறு முறைகள் தேவைப்படும் பட்சத்தில் இந்தியர்களை ஈர்க்கும் விதமாக மலேசிய அரசு புதிய அறிவிப்பை அந்நாட்டு அரசு இதழில் வெளியிட்டு உள்ளது. அதில் குறிப்பிட்டிருப்பதாவது,
மலேசியாவிற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள விரும்பும் இந்தியர்கள் விசா இல்லாமல் 15 நாட்கள் வரை மலேசியாவில் பயணிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது. இதற்கான விதிமுறைகளாக, இந்தியாவில் உள்ள மலேசிய தூதரகத்தில் சுற்றுலா வர விரும்பும் பயணிகள் தங்கள் பெயரை பதிவு செய்து பின் பதிவு செய்த மூன்று மாதங்களுக்குள் மலேசியாவிற்கு வந்து செல்ல வேண்டும் என்றும், மலேசியாவிற்கு வரும்பொழுது இந்தியாவிற்கோ அல்லது வேறு நாட்டிற்கோ திரும்ப செல்லவேண்டிய தேதியில் ரிட்டன் டிக்கெட் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் மீண்டும் இதே ஸ்கீமில் மலேசியாவில் சுற்றுலா செய்ய விரும்பினால் ஏற்கனவே வந்த நபர் 45 நாட்களுக்கு பிறகு தான் மீண்டும் வர அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த முறையானது ஜனவரி 1 2020 முதல் டிசம்பர் 26 2020 வரை அமலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.