Categories
உலக செய்திகள்

விசாவை தொடர்ந்து… மாஸ்டர்கார்டு செயல்பாடுகளும் ரஷ்யாவில் நிறுத்தம்…. வெளியான அறிவிப்பு…!!!

அமெரிக்காவின் மாஸ்டர்கார்டு, விசா ஆகிய நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள்  செயல்பாடுகளை நிறுத்திக்கொள்வதாக தெரிவித்திருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 11-ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷ்ய படைகள், உக்ரைனின் முக்கிய நகர்களில், ஏவுகணை தாக்குதல், பீரங்கி தாக்குதல் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை மேற்கொண்டு அந்நாட்டை நிலைகுலையச் செய்து வருகின்றன. உக்ரைன் அரசு, தங்களை தாக்க தீவிரமாக போராடி வருகிறது.
இந்நிலையில், விசா நிறுவனம், ரஷ்யாவில் விசா கார்டு பரிவர்த்தனைகள் நிறுத்தப்படும் என்று நேற்று அறிவித்தது. அவ்வாறு, விசா கார்டுகள் தடை செய்யப்பட்டால், அந்நாட்டில் அளிக்கப்பட்ட விசா, பிற நாடுகளில் செல்லாது. வெளிநாட்டு விசா கார்டுகள் ரஷ்யாவில் செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொள்ளும் தாக்குதலை எதிர்த்து விசாவை தொடர்ந்து மாஸ்டர்கார்டு நிறுவனமும், தங்கள் செயல்பாட்டை ரஷ்யாவில் நிறுத்திக்கொள்வதாக அறிவித்திருக்கிறது. ரஷ்ய நாட்டு வங்கிகள் அளித்த அட்டைகளை, இனிமேல் மாஸ்டர்கார்டு நெட்வொர்க் ஆதரிக்காது என்றும் நாட்டிற்கு வெளியே அளிக்கப்படும் மாஸ்டர்கார்டுகளும்  ரஷ்ய வணிகர்கள், ஏ.டி.எம்.களில் செல்லாது என்று தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |