Categories
சினிமா தமிழ் சினிமா

“விஷ பாட்டில்” இது தேவை தானா…. பிக்பாஸ் ஜனனியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்…..!!!!

“பிக் பாஸ் 6”  நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஜனனியை சரியான விஷப்பாட்டீல் என விளாசி வருகின்றனர் நெட்டிசன்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்        “பிக் பாஸ் 6”  நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கி ஒளிப்பரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சி தொடங்கி 5 நாட்களே ஆன நிலையில் கடந்த சீசன்களை விடவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த “பிக் பாஸ் 6” ல் 20 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றிருப்பவர் ஜனனி.

இலங்கை  நாட்டை சேர்ந்த தொலைக்காட்சி தொகுப்பாளரான ஜனனி, சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதனை அடுத்து முதல் நாளே தனது வெள்ளந்தியான பேச்சால் பலரையும் கவர்ந்து விட்டார். இதனால் முதல் நாளே அவருக்கு ஆர்மி தொடங்கி விட்டார்கள் நெட்டிசன்கள். பிக் பாஸ் 6 வீட்டிலும் சக போட்டியாளர்கள் மத்தியில் நிதானமாக நடந்து கொள்கின்றார் ஜனனி.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை பாராட்டி தீர்த்தனர். இந்நிலையில் இன்றைய பிக் பாஸ் ப்ரமோவை பார்த்த நெட்டிசன்கள் ஜனனி சரியான விஷ பாட்டீல் என விளாசி வருகின்றனர். மேலும் ஜனனி தனக்கு ஒரு பிரச்சனை என்று வந்தால் நழுவி விடுகின்றார் என்றும் மற்றவர் பிரச்சனையில் மூக்கை நுழைத்து தன்னை மெச்சூர்டாக காட்டிக் கொள்கின்றார் என்றும் சாடி வருகின்றனர். அதே சமயத்தில் ஜனனி பேசுவது சரிதான் என அவருக்கு ஆதரவாகவும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

Categories

Tech |