ஒரு புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காக நியூசிலாந்திற்கு சென்ற மருத்துவ தாய் தன்னுடைய சொந்தக் குழந்தைகளை கொன்றது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
நியூசிலாந்து நாட்டிற்கு மருத்துவரான லாரன் என்பவர் தனது 3 குழந்தைகள் மற்றும் கணவருடன் ஒரு புதிய வாழ்க்கை தொடங்குவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து லாரனும், அவரது குடும்பத்தாரும் நியூசிலாந்து நாட்டிலுள்ள திமரு என்னும் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் குடி புகுந்துள்ளார்கள்.
இதனை தொடர்ந்து லாரன் குடியேறிய அந்த வீட்டிலிருந்து குழந்தைகள் அலரும் சத்தம் அக்கம் பக்கத்தினருக்கு கேட்டுள்ளது. இது தொடர்பாக அக்கம்பக்கத்தினர் காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளார்கள்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள் லாரனின் 3 குழந்தைகளும் கொலை செய்யப்பட்டு பரிதாபமாக உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் 3 குழந்தைகளையும் கொலை செய்தது லாரன் தான் என்னும் சந்தேகத்தின் அடிப்படையில் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.