சாத்தான்குளத்தில் பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகிய இருவரும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது அதற்கான விசாரணையை சிபிஐ மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் தற்போது சாத்தான்குளத்தில் சேர்ந்த மார்ட்டின் என்பவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாட்டின் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.