விசைத்தறி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள செம்மிபாளையம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்சவேணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சக்திவேல், ஜீவிதா என்ற 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நாகராஜ் அதிக குடி பழக்கத்திற்கு அடிமை ஆகியுள்ளார். இதுகுறித்து நாகராஜின் குடும்பத்தினர் அவரிடம் குடிப்பழக்கத்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர். இந்நிலையில் அதை நினைத்து மனவேதனை அடைந்த நாகராஜ் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த அவரது மனைவி நாகராஜ் சடலமாக தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அம்சவேணி பல்லடம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நாகராஜின் உடலை உடனடியாக மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.