Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்…. விசைத்தறி உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழில் நஷ்டத்தால் விசைத்தறி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வைரம் நகர் பகுதியில் பிரகாஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் விசைத்தறி  நடத்தி வந்துள்ளார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நித்விக் என்ற 7 மாத ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாக விசைத்தறியில் ஏற்பட்ட தொழில் நஷ்டத்தால் பிரகாஷ்குமார் மனநிலை பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் பிரகாஷ்குமார் திடீரென விசைத்தறி கூடத்தில் துணிகள் வைக்கும் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரகாஷின் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |