Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“மிகுந்த மன உளைச்சல்” முதியவர் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

விஷம் குடித்த முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவப்பூர் பகுதியில் ராமு என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். மேலும் இவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதனைபார்த்த அருகிலிருந்தவர்கள் ராமுவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராமு பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |