வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொன்னாப்பூர் கிராமத்தில் நாகேஸ்வரன் என்ற முதியவர் வசித்துள்ளார். இவர் அரசு கயிறு ஆலையில் கணக்காளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நாகேஸ்வரன் பல்வேறு நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் இவர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
ஆனால் நாகேஸ்வரனுக்கு வயிற்று வலி தீரவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த நாகேஸ்வரன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகேஸ்வரனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.