Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாழ்க்கையே வெறுத்துப் போச்சு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெண்ணிலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக வெண்ணிலா தனியாக வசித்து வந்துள்ளார். மேலும் வெண்ணிலா அதே பகுதியில் வசிக்கும் சந்தியா என்பவரின் வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து திடீரென சந்தியா உடல்நலக்குறைவால் இறந்துள்ளார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த வெண்ணிலா வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வெண்ணிலா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |