வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் கதிரவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நந்தினி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்ட தகராறில் நந்தினி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனால் மனமுடைந்த கதிரவன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கதிரவன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.