Categories
தேசிய செய்திகள்

விஷ சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு… இழப்பீடு கொடுங்க!…. பா.ஜ.க எம்பி வலியுறுத்தல்….!!!!

மது விலக்கு நடைமுறையில் இருக்கும் பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தில் சாப்ரா என்ற பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 82 ஆக அதிகரித்து உள்ளது. இவ்விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாநிலத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், எதிர்க் கட்சியான பாஜக இது தொடர்பாக அவையில் பல கேள்விகளை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

முன்பாக பா.ஜ.க-வின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து சட்டப்பேரவையில் பேசிய நிதிஷ் குமார் “கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி அளிக்காது. மது அருந்தினால் இறந்துவிடுவீர்கள் என மக்களிடம் நாங்கள் கூறிவருகிறோம். ஆகவே மது குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் அதிலிருந்து விடுபட வேண்டும்” என தெரிவித்திருந்தார். இந்நிலையில் விஷ சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பா.ஜ.க எம்.பி சுஷில்குமார் மோடி தெரிவித்து உள்ளார்.

Categories

Tech |