நடிகர் சங்க தேர்தல் வாக்குகளை எண்ண அனுமதி வழங்க கோரி விஷால் அளித்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நடிகர் சங்க தேர்தலை தடை செய்யக்கோரி தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து நடிகர் விஷால் தேர்தலை நடத்த அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் நடிகர் சங்க தேர்தலை நடத்திக் கொள்ளலாம் என்றும், ஆனால் வாக்குகளை எண்ணுவதற்கு அனுமதியில்லை என்றும் உத்தரவிட்டனர்.
இதையடுத்து ஜூன் 23ஆம் தேதி தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்படமால் இருந்து வரும் நிலையில்,இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது,அதில் நடிகர் விஷால் தரப்பில் இருந்து வாக்குகளை எண்ணுவதற்கு அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. மனுவை நிராகரித்த நீதிபதி, வழக்கு நிலுவையில் இருக்கும் போது வாக்குகளை எண்ணுவதற்கு அனுமதி இல்லை என்றும், எதிர் மனுதாரரான அரசின் தரப்பையும், இணை மனுதாரர் ராஜன் உள்ளிட்டோர் தரப்பையும் விசாரிக்காமல் வாக்குகளை எண்ண அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தது.