ஏ.ஆர்.முருகதாஸ் விஜய்யை வைத்து எடுக்க இருந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்று விஷால் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என ஹிட்டடித்த படங்களை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் தளபதி 65 படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் சில காரணங்களால் அப்படத்தில் இருந்து விலகிக்கொண்டார். அதன்பிறகு தளபதி65 படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது.
இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் விஜய்யை வைத்து எடுக்க இருந்த படத்தில் நடிகர் விஷால் நடிக்க உள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வந்தது. இதற்கு விஷால் மறுப்பு தெரிவித்துள்ளார்.மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் நான் பணியாற்ற வில்லை என்றும் கூறியுள்ளார்.