மிஸ்கின்இயக்காத விஷாலின் படத்தை வாங்க மாட்டோம் என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் விஷாலின் மார்க்கெட்டை சரமாரியாக ஏற்றிய படம் என்றால் அது துப்பரிவாளன் தான். இந்த படத்திற்கு நிகராக விஷாலின் எந்த படமும் வெற்றி பெறவும் இல்லை. வரவேற்பு பெறவுமில்லை. இதற்கு அடுத்தபடியாக சமீபத்தில் இரும்பு திரை படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. தற்போது இதே போன்று மறுபடியும் மிகப்பெரிய வெற்றியை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என நினைத்து துப்பறிவாளன் 2 படத்தை மீண்டும் இணைந்து விஷால் நடித்த முற்பட்டார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இதையடுத்து மீண்டும் வெற்றிப்படம் கொடுக்க வேண்டும் என நினைத்து துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்கப்போவதாக விஷால் தற்போது அறிவித்துள்ளார். இது திரைப்பட திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஸ்டைலுக்கும் விஷால் ஸ்டைலுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உண்டு. எனவே அவர் இயக்கும் படத்தை மட்டுமே நாங்கள் வாங்குவோம்.
மிஸ்கின் இயக்காத படத்தை வாங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு கூட மிஸ்கின் விஷால் தன்னை அழைத்து துப்பறிவாளன் படத்தை இயக்கலாம் என்று கூறினால் உடனடியாக சென்று விடுவேன் என்று அவர் தெரிவித்த போதிலும், விஷால் அழைக்காதது அவரிடம் இருக்கக்கூடிய ஈகோ பிரச்சனையை காட்டுகிறது.