நடிகர் சங்க தேர்தலில் போற்றிடும் பாண்டவர் அணியினர் திடீரென ஆளுநரை சந்தித்து பேசியது தேர்தல் காலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற 23ம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த முறை வெற்றி பெற்ற நாசர் ,விஷால் ,கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன.
ஆனால் 23_ஆம் தேதி நடிகர் SV சேகர் நாடகம் நடத்துவதால் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.இதனையடுத்து பஞ்சபாண்டவர் அணி சார்பில் நடிகர் விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டது.
மேலும் நேற்று ஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் நடிகர் சங்க தேர்தல் அதிகாரி பத்மநாபனை பத்மநாதனை சந்தித்து விஷால் அணியான பாண்டவர் அணியினர் மீது புகார் அளித்துள்ளனர் இந்நிலையில் பாண்டவர் அணியினர் சார்பாக நடிகர் விஷால் கருணாஸ் பூச்சி முருகன் உள்ளிட்டோர் ஆளுநர் மாளிகையில் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை திடீரென்று சந்தித்து பேசியுள்ளனர் இது நடிகர் சங்கத் தேர்தல் களத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது