Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலின் ஆக்சன் அதிரடி திரைப்படம்…. ஜோடி சேரும் பிரபல இளம் நடிகை…!!!

முன்னணி நடிகர் விஷால் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘சக்ரா’ திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. இதை தொடர்ந்து விஷால் தற்போது பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

அடங்கமறு திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேலு இயக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக யார் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி பிரபல இளம் நடிகை பவானி சங்கர் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். ஆக்ஷன் அதிரடி படமாக இது இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |