‘வீரமே வாகை சூடும்’ படத்தின் தீம் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் விஷால் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”எனிமி” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் இயக்குனர் சரவணன் இயக்கத்தில் ”வீரமே வாகை சூடும்” படத்தில் நடித்துள்ளார்.
மேலும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ரவீனா ரவி, பாரதிகண்ணம்மா புகழ் அகிலன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இந்த படத்தின் தீம் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் தீம் பாடல் வரும் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
#VeeramaeVaagaiSoodum #Saamanyudu Single #1 Theme Music Releasing on December 22nd, GB.#VVS #ThemeMusic@Thupasaravanan1 @thisisysr @DimpleHayathi @iYogiBabu @johnsoncinepro @UrsVamsiShekar @HariKr_official pic.twitter.com/KspGwKrBD3
— Vishal (@VishalKOfficial) December 20, 2021