Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மனைவி பேச்சு கேட்கிறதா..? இல்ல அம்மா பேச்சு கேட்கிறதா..? மூணு மாதத்தில் முடிந்த காதல் திருமணம்..!!

குடும்பத்தகராறில்  வாலிபர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள பாப்பான்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்(20).இவர் வெல்டிங் வேலை செய்து வந்தார். நேற்று மதியம் வீட்டிலிருந்து வெளியே சென்ற ராஜ்குமார் வீட்டிற்கு திரும்பவில்லை.இதற்கிடையில் ஆழ்வார்குறிச்சியில் உள்ள வன்னியப்பர்  கோயிலுக்கு பின்புறம் விஷம் குடித்து வாயிலிருந்து ரத்தம் வந்த நிலையில் வாலிபர்  இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர் .

பின்னர் இறந்து கிடந்த வாலிபரின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உயிழந்தவர்  ராஜ்குமார் என்று தெரிய வந்தது . அவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உமா  தங்கம் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திருமணம் முடிந்து  ராஜ்குமாரும் உமா தங்கமும் சிறிய வீட்டில் ராஜ்குமாரின் பெற்றோர், தம்பி, பாட்டி ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனால் இடப்பற்றாக்குறை காரணமாக தனி வீடு பார்த்து வாடகைக்கு செல்ல வேண்டும் என்று அவரது மனைவி கூறிவந்துள்ளார். அதற்கு ராஜ்குமாரின் பெற்றோர் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்  யாருக்கு ஆதரவாக பேசுவது என்று மனக் குழப்பத்திலிருந்து ராஜ்குமார் வீட்டை விட்டு வெளியேறி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |