விஷம் குடித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் தனுஷ்கோடி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேசன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் கம்மாய் கரையோரம் விஷம் குடித்துவிட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனையடுத்து அந்த வழியில் செல்பவர்கள் முருகேசன் இறந்து கிடந்ததை பார்த்து திருமயம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருமயம் காவல்துறையினர் முருகேசனின் சடலத்தை கைப்பற்றி திருமயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.