Categories
இந்திய சினிமா சினிமா

ராஜினாமாவை ஏற்க மறுக்கும் விஷ்ணு மஞ்சு…. வாபஸ் பெறுவாரா பிரகாஷ்ராஜ்..? பரபரப்பில் தெலுங்கு சினியுலகம்…!!!

தெலுங்கு நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பிரகாஷ்ராஜ் வாபஸ் பெறுவாரா என்ற பரபரப்பு தற்போது நிலவி வருகிறது.

பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் தெலுங்கு நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். ஆனால் அவர் இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தார். மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தெலுங்கு நடிகர் சங்க தலைவராக தேர்வாகியுள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னை வெளி மாநிலத்தை சேர்ந்தவர், தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர் கிடையாது என்று பிரசாரம் செய்து தோற்கடித்து விட்டதாக குற்றம் சாட்டி தெலுங்கு நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மேலும் அவர் விஷ்ணு மஞ்சுவுக்கு தனது ராஜினாமா குறித்து ஒரு குறுஞ்செய்தி அனுப்பி அதனுடன் உறுப்பினராக இல்லாமல் இருந்தாலும் உங்களுக்கு ஆதரவு அளிப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு விஷ்ணு மஞ்சு அனுப்பிய பதில் என்னவென்றால், “நீங்கள் ராஜினாமா செய்வதை நான் ஒருபோதும் விரும்பவில்லை.

மேலும் என்னை விட நீங்கள் மூத்தவர். ஆகையால் வெற்றி தோல்வியை சமமாக பார்க்க வேண்டும் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். உணர்ச்சிவசப்பட்டு ராஜினாமா செய்ய வேண்டாம். எங்கள் குடும்பத்தில் நீங்களும் ஒருவர். நாம் இணைந்து பணியாற்றுவோம். விரைவில் உங்களை நேரில் சந்திக்கிறேன்” என்று கூறியுள்ளார். இதையடுத்து நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ராஜினாமாவை வாபஸ் பெறுவாரா என்ற பரபரப்பு தற்போது நிலவி வருகிறது.

Categories

Tech |