Categories
சினிமா தமிழ் சினிமா

அமலாபாலும் உண்டா ? பிரபல நடிகரின் வாழ்க்கை கேள்வி குறி …!!

விஷ்ணு விஷால் தனது மனைவியை பிரிந்ததற்கு இவர்கள்தான் காரணம் என கூறப்பட்டதற்கு அவர்  பதிலளித்துள்ளார்.

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் பிரபலமான நடிகர் விஷ்ணு விஷால் தொடர்ந்து பல திரைப்படங்கள் நடித்து வந்தாலும் ராட்சசன் திரைப்படம் அவருக்கு பெரிய அளவில் கைகொடுத்தது. தற்போது அவர் நடித்த எப்ஐஆர் படம் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.

2011ஆம் ஆண்டு நடிகர் கே. நட்ராஜ் மகள் ரஜினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஷ்ணு விஷால், 2018 ஆம் ஆண்டு ரஜினியை பிரிந்து விவாகரத்து செய்ததாக தகவல் வெளியானது. அதன் பின்னர் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை விஷ்ணு விஷால் காதலிப்பதாக சொல்லப்பட்டது.

அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வந்தது. அதேசமயம் ஜுவாலா கட்டா பாட்மிண்டன் வீரர் சேதன் ஆனந்தை திருமணம் செய்து 2011ல் விவாகரத்து செய்தார். இந்நிலையில் விஷ்ணு மனைவி ரஜினியை பிரிந்ததற்கு ஜுவாலா கட்டாவும் நடிகை அமலாபாலும் காரணம் என பலரும் கூறிவந்தனர்.

இதுபற்றி விஷ்ணு விஷால் பேசுகையில் “மனைவியை பிரிந்த பின்பு ஜுவாலா கட்டாவை சந்தித்தேன் அதிக நேரத்தை அவருடன் செலவிட தொடங்கினேன் . ஜுவாலா நேர்மறை எண்ணங்கள் கொண்டவர் அதனால் அவரை எனக்கு பிடிக்கும். அவரும் அவருடைய திருமண வாழ்வில் பிரிவை சந்தித்துள்ளார்.

நாங்கள் அதிகம் மனம்விட்டு பேசி இருக்கிறோம் . நல்ல முறையில் தான் எங்கள் உறவு செல்கிறது என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம். நான் ஜுவாலாவால் எனது மனைவியை பிரிந்ததாக சமூக வலைதளங்களில் பலர் கூறி வந்தனர்.

அதேபோன்று ராட்சசன் திரைப்படத்தில் நடித்த பொழுது அமலாபாலை காதலித்ததாகவும் கூறிவந்தனர். அவர்களின் விமர்சனங்களை நான் தவறாக கூறவில்லை அது அவர்களின் கருத்து ஆனால் இது என் வாழ்க்கை” என கூறினார்.

Categories

Tech |