நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கடைசியாக ‘ராட்சசன்’ திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அமெரிக்காவின் புகழ்பெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விருதுகள் விழாவில் ‘ராட்சசன்’ திரைப்படத்துக்கு சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த த்ரில்லர், சிறந்த இசைமைப்பாளர் என நான்கு பிரிவுகளில் விருதுகள் கிடைத்தன.
ராட்சசன் படத்தைத் தொடர்ந்து அவர் மீண்டும் அடுத்த படத்தை தயாரிக்கும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளார். ‘FIR ஃபைசல் இப்ரஹிம் ரைஸ்’ என்னும் படத்தைதான் அவர் தற்போது தயாரிக்கிறார். இப்படத்தை முன்பு சுஜாதா நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது தயாரிப்பு பணியில் விஷ்ணு ஈடுபட்டிருக்கிறார்.
‘FIR ஃபைசல் இப்ரஹிம் ரைஸ்’ என பெயிரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை மனு ஆனந்த் என்னும் அறிமுக இயக்குநர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே கௌதம் வாசுதேவ் மேனனுடன் பணியாற்றியுள்ளார். மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன் நடிக்கும் இப்படத்திற்கு அஸ்வத் இசையமைக்கிறார்.
இதனையடுத்து விஷ்ணு விஷால் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தின் இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்து விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த படம் ஒரு ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட குடும்ப படம் என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கவுள்ளதாகவும் ட்வீட் செய்துள்ளார்.
இந்தாண்டு விஷ்ணு விஷாலுக்கு ஒரு படமும் வெளியாகவில்லை. ’ஜெகஜால கில்லாடி’, ’எஃப்ஐஆர்’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதால், அடுத்தாண்டு இப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Last year on this day #silukkuvarpattisingam released with 5 films..got really good feedback from family audiences..on this day announcing my association with @ChellaAyyavu again under @VVStudioz this time a nice sports family drama:)movie to begin next year.other details soon 🙂
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) December 21, 2019