ராணிப்பேட்டையில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கப்படும் சித்த மருத்துவ மையத்தை கலெக்டர் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.
ராணிப்பேட்டையில் பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தின் எல்லையோரங்களில் சோதனை சாவடி அமைத்து காவல்துறையினர் இ-பதிவின்றி வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இதற்கிடையே பல பகுதிகளில் முகாம்கள் போடப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் விளாபாக்கத்திலிருக்கும் தனியார் கல்லூரியில் மையம் அமைக்கப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சித்தா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை கலெக்டர் திடீரென்று ஆய்வு செய்தார். மேலும் அங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளையும் கேட்டறிந்தார்.