போரின்போது இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜப்பான் நாட்டின் தலைநகரில் கட்டப்பட்ட கோவிலுக்கு தற்போது அந்நாட்டின் ராணுவ மந்திரி முதன்முறையாக சென்றுள்ளார்.
ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் 2 ஆம் உலகப்போர் வரை உயிரிழந்த வீரர்களின் நினைவாக யாசுகுனி என்னும் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு கொரிய நாடுகளும், சீனாவும் தங்களுடைய கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஜப்பான் நாட்டினுடைய ராணுவ மந்திரி முதன்முறையாக அந்நாட்டின் தலைநகர் டோக்கியோவிலுள்ள யாசுகுனி கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, போரின் போது நாட்டிற்காக தனது உயிரையே தந்த வீரர்களுக்கு தன்னுடைய அஞ்சலியை செலுத்தியுள்ளேன் என்று கூறியுள்ளார்.