சென்னை வேளச்சேரி ஃபீனிக்ஸ் மால் சென்றவர்கள் கவனமாக இருக்க வேண்டும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 309ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த 75 பேரில் 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் சென்னை வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள லைப்ஸ்டைல் கடையில் வேலை பார்க்கும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஃபீனிக்ஸ் மாலுக்கு மார்ச் 10 முதல் மார்ச் 17 வரை சென்றவர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கவனமாக இருக்க அறிவுறுத்தபட்டுள்ளது.
கொரோனாவிற்கு எதிரான போரில் நீங்கள் ஒவ்வொருவரும் பங்கேற்கலாம்
உதவி தேவைப்படுபவர்கள் அனைவருக்கும் சென்று சேரும் வரை இதைப் பகிருங்கள்
இங்குள்ள ஒவ்வொரு குடிமகனின் ஆரோக்கியமும் இந்த நகரத்தின் ஆரோக்கியத்தை முடிவு செய்யும் காலமிது
#Covid19Chennai #Chennai
#GCC #ChennaiContactTracing pic.twitter.com/ITcelj24yy— Greater Chennai Corporation (@chennaicorp) April 2, 2020
பீனிக்ஸ் மாலுக்கு மார்ச் 10-17ம் தேதிக்குள் சென்றவர்கள் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தர மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. அறிகுறி இருப்பவர்கள் 044 46122300 என்று எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும் படி சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.