கேரளாவில் தரையிறங்கும் போது விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 2 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலத்தில் துபாயில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. தரையிறங்கும்போது விமானம் விபத்துக்குள்ளாகி பாதியாக உடைந்து சிதைந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள், 2 விமானிகள் உட்பட மொத்தம் 191 பேர் இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
தீயணைப்புத்துறையினர், ஆம்புலன்ஸ் ஊழியர்கள், காவல்துறையினர் விரைந்து, மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. மேலும் விமானி உட்பட இருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.. விசாரணையில் விமானத்தின் முன்சக்கரத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாக விமானம் ஓடு பாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே தேசிய மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட மத்திய அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
#WATCH Kerala: Dubai-Kozhikode Air India flight (IX-1344) with 190 people onboard, skidded during landing at Karipur Airport today. (Video source: Karipur Airport official) pic.twitter.com/6zrcr7Jugg
— ANI (@ANI) August 7, 2020