நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ஆம் வருடத்தில், நடிகர் அஜித், நயன்தாரா நடித்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தந்தை மகள் பாசத்தை வெளிப்படுத்தும் இத்திரைப்படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இத்திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணீஷ் ஷாவின் கோல்டுமேன் டெலி பிலிம், விஸ்வாசம் திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை 4 கோடி ரூபாய்க்கு வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் நடிக்க அஜய்தேவ்கன் மற்றும் அக்ஷய் குமார் ஆகிய பாலிவுட் நடிகர்களிடம் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.