நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்வதற்கு பாலிவுட் கதாநாயகர்கள் தயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் நடித்து சிறுத்தை சிவா இயக்கி, கடந்த 2019 ஆம் வருடத்தில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. தந்தை மற்றும் மகளின் பாசத்தை வெளிப்படுத்தும் இத்திரைப்படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களும் வரவேற்றனர். எனவே, இத்திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இதற்கு முன்பு, மாநகரம், விஜய் சேதுபதியின் விக்ரம் வேதா, நடிகர் கார்த்தியின் கைதி, உட்பட பல தமிழ் படங்கள் இந்தியில் ரீமேக் ஆகியிருக்கிறது. இந்நிலையில், விஸ்வாசம் திரைப்படத்தை ரீமேக் செய்ய அங்கிருக்கும் கதாநாயகர்கள் தயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரைப்படங்கள் அதிகளவில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில், விசுவாசம் திரைப்படத்தை ரீமேக் செய்வதற்கு அவர்கள் விரும்பாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.