Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வைட்டமின் ஏ சத்துக்கள் கொட்டிக்கிடக்கும் உணவு வகைகள் …!!!

வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால்  ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம். இத்தகைய விட்டமினை  இயற்கையான உணவு முறைகளை பின்பற்றுவதன் மூலம் எளிதாகப் பெற முடியும்.   

கேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் நிரம்பியுள்ளது. கேரட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ அல்லது ஜூஸ் போட்டோ  குடிக்கலாம். ஆடு மற்றும் கோழியின் ஈரலில்  வைட்டமின் ஏ மற்றும் கனிமச்சத்துக்கள் நிரம்பியுள்ளன .

ஈரல் ஆடு க்கான பட முடிவு

நல்ல அழகான  சருமத்தை பெற  வைட்டமின் ஏ சத்து நிறைந்த பசலைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ , பீட்டா கரோட்டீன் வடிவில்  உள்ளதால் மிகவும் நல்லது.

சர்க்கரைவள்ளிக்கிழங்கு க்கான பட முடிவு

சீஸ் மற்றும்  பால் பொருட்களிலும் வைட்டமின் ஏ அதிகமாக நிறைந்துள்ளதால் இதை அடிக்கடி உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் அழகான  சருமத்தை பெறமுடியும்.

cheese க்கான பட முடிவு

முருங்கை கீரையில் கால்சியம், வைட்டமின் ஏ , வைட்டமின் சி, இரும்புசத்து, மெக்னீசியம், நார்சத்து போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளதால், இதனை உணவில் அடிக்கடி கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும் .

முருங்கைக்கீரை க்கான பட முடிவு

தினமும் மாம்பழத்தினை உண்டு வந்தால்  இரத்த சோகை மற்றும் கண் பார்வை கோளாறு போன்ற பிரச்சனை ஏற்படாமல் தடுக்கலாம்.கோடைக்காலத்தில் கிடைக்கும் முலாம் பழத்தில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதோடு, வைட்டமின் ஏ  சத்தும் அதிகமாக உள்ளது.அவகேடோவில் ஆரோக்கியமான  வைட்டமின் ஏ சத்து அதிகமுள்ளது .

papaya க்கான பட முடிவு

பொதுவாக  சால்மனில் வைட்டமின் ஏ சத்து  உடலுக்கு வேண்டிய அளவில் நிறைந்துள்ளதால் அதிகமாக எடுத்துக்கொள்ளலாம் .  பப்பாளி அதிகம் சாப்பிட்டால், சருமம் பொலிவாக இருக்கும் . ஏனெனில் இதில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது.

Categories

Tech |