வைட்டமின் பி9 உணவுகள் அதாவது போலிக் அமிலம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள தான் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த இது உதவுகிறது. இது எந்த உணவில் உள்ளது என்பதை குறித்து பார்ப்போம் .வைட்டமின் பி9 நீரில் கரையக்கூடியது. இயற்கையாகவே பல உணவுப் பொருட்களில் இது நிறைந்துள்ளது. உடல் எடை அதிகரிக்கும், வயிற்றில் இருக்கும் கருவின் நரம்பு குழாய் குறைபாடுகள் தடுக்கவும் இது உதவுகிறது. பீன்ஸ், பட்டாணி, பருப்பு வகைகளில் போலிக் அமிலம் அதிக அளவில் உள்ளது. ஒரு கப் பீன்ஸில் 150 முதல் 300 என்சிசி போலிக் அமிலம் உள்ளது. பயறு வகைகளில் 358 போலிக் அமிலம் உள்ளது.
பருப்புவகைகள் புரதம், நார்ச்சத்து மற்றும் சிறந்த மூலமாகும். முட்டை உணவில் சேர்ப்பது என்பது மிகவும் அவசியம். முட்டையில் 22 என்சிசி அளவு ஃபோலேட் உள்ளது. அன்றாடம் இல்லையெனில் வாரத்திற்கு சில நாட்கள் முட்டை சேர்ப்பது மிகவும் நல்லது. இதில் புரதம், செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. கீரைகள், பச்சைக் கீரைகள் மற்றும் கீரைகளில் கலோரிகள் குறைவாக உள்ளது. ஃபோலேட் உள்ளிட்ட முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து உள்ளது. ஒரு கப் கீரை 22.8 என்சிசி அளவு ஃபோலேட் உள்ளது.
சிட்ரஸ் பழங்கள் மிகவும் ருசியானது. அவை என்ன என்றால் ஆரஞ்சு, திராட்சை பழம், எலுமிச்சை போன்றவை. இதில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது உதவுகிறது. கொட்டை மற்றும் விதைகளில் புரதம் மற்றும் நார்ச் சத்து உள்ளது. இது உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களை தருகின்றது. உங்கள் உணவில் ப்ராக்கோலியை சேர்ப்பது மிகவும் அவசியம். ஒரு கப்பு ப்ரோக்கோலியில் 57 எம்ஜி ஃபோலேட் உள்ளது.
சமைத்த ப்ரோக்கோலியில் இவை இன்னும் அதிகரிக்கும். இதில் உள்ள மாங்கனீசு உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. பப்பாளி, வாழைப்பழம், அவகேடோ பழம் ஆகியவற்றிலும் அதிக அளவு வைட்டமின் பி9 உள்ளது. இவை நாம் அன்றாட உணவில் கொஞ்சமாவது இதனை எடுத்து கொண்டால் நம் உடலுக்குத் தேவையான போலிக் அமிலம் நமக்கு கிடைக்கும்.