Categories
லைப் ஸ்டைல்

“வைட்டமின் டி குறைபாடு” பிரச்சினைகளும்…. சரி செய்யும் உணவுகளும்….!!

வைட்டமின் டி குறைபாட்டினால் ஏற்படும் பிரச்சினைகளையும், சரி செய்யும் உணவுகளையும் பார்க்கலாம்.

வைட்டமின் டி உடலுக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் எவ்வளவு முக்கிய தேவை என்பதை அவ்வபோது கேட்டும் படித்தும் தெரிந்து கொண் டிருக்கிறோம். வெப்ப மண்டல நாடான நம் இந்தியாவில் சமீபகாலங்களாக இந்த பற்றாக்குறை அநேகம் பேருக்கு தொற்றிவருகிறது.

பிரச்சினைகள்:

முதுகுவலி, தசைவலி, உடல் வலி, காரணமே இல்லாமல் உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் இருக்கும்.

எலும்புகள் வலுவிழக்கும், பற்கள் நரம்புகளில் பாதிப்பை உண்டாக்கும்.

எலும்பு அழற்சி, எலும்பு புரை என எலும்பு சார்ந்த நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு.

சிலருக்கு அதிகப்படியான குறைபாடு உண்டாகும் போது முடக்குவாதம், நுரையீரல் பிரச்சனைகளும் அதிகரிக்கலாம்.

எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்:

1.கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் டி ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். இது இதயநோய் மற்றும் சுவாச கோளாறுகளின் அபாயத்தை குறைக்கிறது.

2.தினமும் ஒரு தம்ளர் பால் குடிப்பதால் உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்தில் 20 சதவீதம் வரை பெற முடியும்.

3.சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி அதிக நன்மை பயக்கக் கூடியது.

4.விட்டமின் டி பொருட்களான ஆரஞ்சு பழச் சாறு மற்றும் முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி அதிகம் உள்ளது இதுவும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

5.காளானில் வைட்டமின் டி அதிகம் உள்ளது. சூரிய ஒளியிலேயே வளரும் இந்த மஷ்ரூமில் வைட்டமின் பி1 பி2 பி5 சத்துகள், காப்பர் போன்றவை நிறைந்திருக்கிறது

6.சால்மன் மீன் சேர்த்துவருவது நல்லது. வைட்டமின் டி, கால்சியம், செலினியம், பாஸ்பரஸ் மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்த மீன் இது.

Categories

Tech |