அமெரிக்க அதிபரான ஜோ பைடன், மீண்டும் மரபு விதிகளை மீறியுள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ராஜ குடும்பத்தின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நபர்கள் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகவே அங்கு வந்து விட வேண்டும், கடைசியாகத்தான் மகாராணி வருவார். அதன்பின் நிகழ்ச்சி முடிந்தவுடன் முதலில் மகாராணியார் தான் செல்வார் என்பது நீண்ட காலமாகவே இருக்கும் மரபு ஆகும். இதேபோல் மகாராணியாருடன் தனியாக பேசும் எவரும் தாங்கள் எது குறித்து உரையாற்றினோம் என்பதை வெளியில் சொல்லக் கூடாது என்பதும் வழக்கத்திலிருக்கும் மரபு ஆகும்.
ஆனால் அமெரிக்க அதிபரான ஜோ பைடன் தொடர்ந்து இந்த 2 மரபுகளையுமே மீறியுள்ளார். முதலில், மகாராணியார் C-7 உச்சிமாநாடு கூட்டத்திற்காக இங்கிலாந்து வந்த பல நாடுகளின் பிரதமர்களுக்கு விருந்து வைக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். இதனையடுத்து அந்த விருந்து நிகழ்ச்சிக்கு அமெரிக்க அதிபரான ஜோ பைடன் இங்கிலாந்து மகாராணியார் வந்த பிறகே வந்துள்ளார்.
இதனைதொடர்ந்து 2 ஆவதாக அமெரிக்க அதிபரான ஜோ பைடன் மீறிய மரபானது, உச்சி மாநாடு கூட்டம் முடிந்த பின்பு லண்டனிலிருந்து புறப்பட்ட அவர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, மகாராணியார் சீனா அதிபர் குறித்தும், ரஷ்ய அதிபர் குறித்தும் தெரிந்து கொள்வதற்கு விரும்பினார் என்று கூறியுள்ளார். ஆனால் அமெரிக்க அதிபரின் இந்த விதிமீறல்கள் எதனையுமே மகாராணியார் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.