Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதுக்கு மேல திறக்கக் கூடாது… விதிமுறையை மீறினால் அவ்ளோதான்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

வாணியம்பாடியில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆலங்காயம் போன்ற பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகின்றது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் சிவனருள் உத்தரவின்படி, துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம், நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வர் மற்றும் அதிகாரிகள் பலர் சிஎஸ் சாலை போன்ற பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அப்போது தமிழக அரசினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி அதிக நேரம் கடை நடத்தி வருதல், முக கவசம் அணியாமல் இருத்தல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல் போன்ற காரணங்களுக்காக காவல்துறையினர் 7 கடைகளுக்கு சீல் வைத்ததோடு, அபராதமும் விதித்துள்ளனர். மேலும் அத்தியாவசிய தேவை இன்றி வெளியில் சுற்றித் திரிபவர்களை காவல்துறையினர் நிறுத்தி  அவர்களையும் எச்சரித்து அபராதம் விதித்துள்ளனர்.

Categories

Tech |