Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சமூக இடைவெளி இல்லை…. டீ கடையில் குவிந்த கூட்டம்…. காவல் அதிகாரியின் அதிரடி நடவடிக்கை….!!

வாணியம்பாடியில் விதிமுறைகளை மீறிய டீக்கடைக்கு காவல்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் சி.எஸ் சாலை, ஆஸ்பத்திரி ரோடு, மலங்கு சாலை ஆகிய பகுதிகளில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி மற்றும் துணை போலீஸ் சூப்ரண்டு பன்னீர்செல்வம் தலைமையில் வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சி.எஸ் சாலையில் இருக்கும் டீக்கடையின்  உரிமையாளர் முக கவசம் அணியாமல் விதிமுறைகளை மீறியதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் மருத்துவமனை இருக்கும் சாலையில் அமைந்துள்ள அந்த டீ கடையில்  கொரோனா தொற்று பரவும் வகையில், குவிந்து நின்று வாடிக்கையாளர்கள் டீ குடித்து கொண்டிருந்தனர். இதனால் அந்த டீ கடைக்கு காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி இதுபோன்று விதிமுறைகளை மீறுபவர்கள் மீது   நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |