Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சோதனை தொடரும்…. ஆட்டோக்களுக்கு அபராதம்…. அதிகாரிகளின் தகவல்….!!

விதிமுறைகளை மீறி இயங்கிய 15 ஆட்டோகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் தலைமையில் இருசக்கர வாகன ஆய்வாளர் ராமரத்தினம் மற்றும் அதிகாரிகள் அன்னதானப்பட்டி உள்பட 4 பகுதிகளில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வாகனம் உரிய பெர்மிட் இன்றி இயங்கியதும், தகுதி சான்றிதழ் இல்லாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது.

இதை போல் பல புகார்களின் அடிப்படையில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 15 ஆட்டோகளுக்கு 25,௦௦௦ ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து உரிய முறையில் வாகனங்களை இயக்க ஓட்டுநர்களுக்கு அறிவுரைகள் வழங்கி அவர்களை அங்கிருந்த அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இம்மாவட்டம் முழுவதும் இது போன்ற வாகன சோதனை தொடரும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |