சட்டவிரோதமாக கஞ்சா செடியை வளர்த்து வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடபுதுப்பட்டு பகுதியில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின்படி தனிப்படை காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டின் பின்புறத்தில் உள்ள பூந்தோட்டத்தில் கஞ்சா செடியை வளர்த்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சா செடியை வளர்த்த விக்னேஸ்வரன் என்பவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து, அங்கு இருந்த கஞ்சா செடியை பறிமுதல் செய்து தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பின் விக்னேஸ்வரனை தாலுகா காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.