Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறு…. தொழிலாளியின் திடீர் முடிவு…. திருவாரூரில் சோகம்….!!

குடும்ப தகராறு காரணமாக தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சுரைக்காயூர் காளியம்மன் கோவில் தெருவில் பாரதிராஜா என்பவர் வசித்து வந்தார். இவர் கூலி தொழிலாளியாக இருந்தார். இந்நிலையில் பாரதிராஜா குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் பாரதிராஜா திடீரென பூச்சி மருந்தை  குடித்துவிட்டார்.

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் பாரதிராஜாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் பாரதிராஜா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |