சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள விளாங்குட்டை பகுதியில் சிலர் நாட்டுத் துப்பாக்கியுடன் வனப்பகுதிக்குள் சென்று வேட்டையாடுவதாக போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின்படி தனிப்பிரிவு போலீஸ் ஏட்டுகள் முருகன், தேவராஜ் சென்னிமலை ஆகியோர் அந்த பகுதிக்கு சென்று பெருமாள் என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பெருமாள் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி இருந்ததை போலீஸ் ஏட்டுகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த மாதன் என்பவருடைய வீட்டிலும் போலீஸ் ஏட்டுகள் சோதனை மேற்கொண்டபோது அங்கும் நாட்டு துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் 2 துப்பாக்கிகளையும் போலீஸ் ஏட்டுகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பெருமாள், மாதவன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.