காணாமல் போன பெண் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்யாணபுரம் காளியம்மன் கோவில் தெருவில் மோகன்-ஸ்ரீதேவி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு பவித்ரா என்ற மகள் இருந்தார். இவர் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இந்நிலையில் வீட்டில் படுத்திருந்த பவித்ரா திடீரென்று காணாமல் போய் விட்டார். இதுகுறித்து ஸ்ரீதேவி கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.