மூதாட்டியிடம் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி மேல முதல் தெருவில் மூதாட்டி மாரியம்மாள் வசித்து வருகின்றார். இவருடைய கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதில் மாரியம்மாளின் மகள் திருமணம் முடிந்து கணவர் வீட்டுற்கு சென்று விட்டார். இதனால் மாரியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றார். இந்நிலையில் அந்த வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் மாரியம்மாளை அரிவாளால் வெட்டியதோடு அவர் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
அப்போது மாரியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இவ்வாறு மர்மநபர் மாரியம்மாளை அரிவாளால் வெட்டியதில் அவரின் தலை, காது, மூக்கு உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன் அரசு மருத்துவமனைக்கு சென்று மூதாட்டி மாரியம்மாளிடம் விசாரணை மேற்கொண்டார். மேலும் இதுகுறித்து இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை அரிவாளால் வெட்டி தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.