சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள காரிமங்கலம் அருகே ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த 18 வயது வாலிபர் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை சிறுமி தடுத்தபோது அவருக்கு வாலிபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து சிறுமி தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்தார். இது தொடர்பாக புகாரின்பேரில் காவல்துறையினர் வாலிபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.