மர்ம நபர்கள் வீடு புகுந்து நகை மற்றும் செல்போனை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கொத்தங்குளம் கிராமத்தில் விஜயராமன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த செப்டம்பர் 2 – ஆம் தேதியன்று விஜயராமன் தனது மனைவி மற்றும் 2 மகளுடன் இரவு நேரத்தில் வீட்டில் கதவை தாளிட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.
அதன்பிறகு மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 8 கிராம் மதிப்பிலான தங்க நகை மற்றும் 2 செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து விஜயராமன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.