Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தந்தை- மகனின் கள்ளத்தனம்…. வீட்டில் வைத்து பண்றீங்க…. கைது செய்த காவல்துறையினர்….!!

வீட்டில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்ச ஊறல் போட்ட தந்தை- மகன் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து மதுபான கடைகளும் அடைக்கப்பட்டு இருப்பதனால் சிலர் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்ச முயற்சி செய்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பழையனூர் பகுதியில் ஆசைத்தம்பி மற்றும் அவரது மகன் விமல்ராஜ் என்பவர் வசித்து வருகின்றனர்.

இதனையடுத்து தந்தை- மகன் இருவரும் சேர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக  வீட்டில் ஊறல் போட்டு வைத்திருக்கின்றனர். இதுகுறித்து தகவலறிந்த பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவநேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தந்தை- மகன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்ச ஊறவைத்த உறல்களை காவல்துறையினர் அழித்துள்ளனர்.

Categories

Tech |